Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வழமைக்கு திரும்பிய 80 வீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம்

இலங்கையில் வழமைக்கு திரும்பிய  80 வீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம்

9 மாசி 2025 ஞாயிறு 13:14 | பார்வைகள் : 380


இலங்கையில் சுமார் 80 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மீதமுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க தேவையான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்துள்ளன.

திடீர் மின்விநியோகத் தடை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நீர்மின்னுற்பத்தியின் ஊடாக தொடர்ச்சியாக மின் விநியோகத்தை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர், பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்