ஜாம்பவான்கள் ரொனால்டோ, மெஸ்ஸியின் சாதனையை தூளாக நொறுக்கிய எம்பாப்பே
![ஜாம்பவான்கள் ரொனால்டோ, மெஸ்ஸியின் சாதனையை தூளாக நொறுக்கிய எம்பாப்பே](ptmin/uploads/news/Sports_renu_yujjk.jpg)
9 மாசி 2025 ஞாயிறு 14:32 | பார்வைகள் : 198
பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே, 500 கோல் உதவிகள் செய்த இளம் வீரர் எனும் வரலாற்று சாதனையைப் படைத்தார்.
சான்டியாகோ பெர்னாபியூ மைதானத்தில் நடந்த லா லிகா போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், அட்லெடிகோ மாட்ரிட் வீரர் ஜூலியன் ஆல்வரெஸ் (Julian Alvarez) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 50வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) கோல் அடித்தார்.
அதன் பின்னர் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 23 ஷாட்கள் அடித்தது. இதில் பெரும்பாலும் எம்பாப்பே உதவியுள்ளார்.
இதன்மூலம் வரலாற்றில் 500 தொழில் கோல் பங்களிப்புகளை எட்டிய இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
26 வயதான கைலியன் எம்பாப்பே, ஜாம்பவான் வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, நெய்மர் உட்பட பல ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்தார்.
மேலும் இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் 23 கோல்களுடன் ரியல் மாட்ரிட்டை எம்பாப்பே வழிநடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](/images/engadapodiyalxy.jpg)