சிறுமி கொலை வழக்கு... பெருமளவான காவல்துறையினர் தேடுதல் வேட்டை!!
![சிறுமி கொலை வழக்கு... பெருமளவான காவல்துறையினர் தேடுதல் வேட்டை!!](ptmin/uploads/news/France_rajeevan_IMG-20250209-WA0012.jpg)
9 மாசி 2025 ஞாயிறு 14:38 | பார்வைகள் : 2668
Louise எனும் 11 வயதுடைய சிறுமி கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அறிந்ததே. இன்று பெப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை பெருமளவான காவல்துறையினர் சடலம் மீட்கப்பட்டிருந்த இடத்தில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
Epinay-sur-Orge (Essonne) நகரில் ஒதுக்குப்புறம் ஒன்றில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரங்களுக்கிடையே சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. கொலையாளி தொடர்பிலான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அதை அடுத்து இன்று நண்பகலின் பின்னர் 120 வரையான காவல்துறையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
அவர்களுடன் தடயவியல் நிபுணர்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் போன்றோரும் இணைந்து தடயங்களை சேகரித்தனர்.
![](/images/engadapodiyalxy.jpg)