வசூல் சக்கரவர்த்தி Intouchables! - ஒரு ஆச்சரிய பட்டியல்!!
24 கார்த்திகை 2017 வெள்ளி 15:30 | பார்வைகள் : 19472
நேற்று பிரெஞ்சு புதினத்தில் Intouchables திரைப்படம் குறித்து குறிப்பிட்டிருந்தோம். (அதை இன்னும் படிக்கவில்லை என்றால்.. கீழே சுட்டி உள்ளது. படித்துவிட்டு இதை தொடரவும்...)
இந்த பிரெஞ்சு திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி மிகப்பெரும் வெற்றி கண்டது. இது நிச்சயம் எதிர்பாராத ஒன்றுதான்.
படத்தை தயாரிக்க 9.5 மில்லியன் யூரோக்கள் செலவானது. Nicolas Duval Adassovsky, Yann Zenou, Laurent Zeitoun ஆகிய மூவரும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்கள்.
படம் வெளியான 9 ஆவது வாரத்தில், பிரெஞ்சு திரைப்பட வரலாற்றில் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது.
தவிர, 2011 ஆம் ஆண்டில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பிரெஞ்சு திரைப்படமாக இது அசுர சாதனை புரிந்தது. முதல் 16 வாரங்களில் 19 மில்லியன் மக்களால் இத்திரைப்படம் பார்வையிடப்பட்டிருந்தது.
மொத்தமான இத்திரைப்படம் உலகம் முழுவதும் 444,700,000 அமெரிக்க டொலர்களை வாரி குவித்தது.
France,
Germany ,
Spain ,
Italy ,
South Korea ,
Switzerland,
Japan,
United States,
Canada ,
Netherlands,
Belgium,
Luxembourg ,
Brazil ,
Austria,
Denmark,
Poland,
Israel,
Portugal,
Russia,
Greece,
Taiwan,
Colombia,
Hong Kong,
Hungary (Budapest),
Peru,
Czech Republic,
Turkey,
Croatia,
Romania,
Lebanon,
Slovenia,
Serbia,
Montenegro ,
Bulgaria,
Ukraine,
Lithuania
போன்ற கூகுள் மேப்பில் மாத்திரமே பார்த்த நாடுகளில் எல்லாம் இத்திரைப்படம் ஓடி மிகப்பெரும் வெற்றி பெற்றது. ஜப்பானின் வரலாற்றில் மிகப்பெரும் வசூல் அள்ளிய பிரெஞ்சு திரைப்படம் இதுவாகும்.
பிரான்சுக்கு வெளியே 30 மில்லியன் 'டிக்கெட்'டுகள் விற்றுத்தள்ளின. 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜெர்மனியில் வெளியான அனைத்து பிரெஞ்சு திரைப்படங்களின் வசூலையும் அடியோடு தகர்த்தது இத்திரைப்படம்.
சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதிகம் வசூலித்த பிரெஞ்சு திரைப்படம் இதுவாகும். பின்னர் இறுதியாக ஒரு சாதனையில் சென்று முடிந்தது. ஆங்கில திரைப்படத்தை தவிர, உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த திரைப்படமாக Intouchables பிரெஞ்சு திரைப்படம் பதிவானது!