மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் நடந்தது என்ன?
![மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் நடந்தது என்ன?](ptmin/uploads/news/Cinema_tharshi_aji.jpg)
9 மாசி 2025 ஞாயிறு 15:35 | பார்வைகள் : 347
நடிகர் அஜித்தின் கார் மீண்டும் விபத்தில் சிக்கியிருக்கிறது. இதனை அவரே தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடம்பிடித்து அசத்தியது. அதைத்தொடர்ந்து போர்ச்சுக்கல் நாட்டில் எஸ்டோரில் நகரில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். இதற்காக அஜித் குமார் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ரேஸ் பயிற்சியின் போது அஜித்துக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “இந்த கார் பயிற்சியில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது.
இது பெருமையாக இருக்கிறது. இது ஈஸியான சர்க்யூட் இல்லை. அதிலும் குறிப்பாகக் கடைசி செக்டாரை டெக்னிக்கலாகவே அணுக வேண்டும். இங்கு எனது கார் ரேஸ் டைமிங் குறைந்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. இந்த ரேஸ் நன்றாகவே போய் கொண்டு இருக்கிறது.
ஆனால், காலை நடந்த பயிற்சி சுற்று மோசமாகப் போனது. எனது கார் மிக மோசமான விபத்தில் சிக்கியது. மெக்கானிக் மற்றும் டீம் உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் காரை சரி செய்துவிட்டனர்.
![](/images/engadapodiyalxy.jpg)