Paristamil Navigation Paristamil advert login

‘ஜன நாயகன்’ படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்..?

‘ஜன நாயகன்’ படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்..?

9 மாசி 2025 ஞாயிறு 15:38 | பார்வைகள் : 2189


விஜயின் ‘ஜன நாயகன்’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில், பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பாலான காட்சிகளை சென்னையிலேயே அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருடைய காட்சிகளை வரும் வாரத்தில் காட்சிப்படுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், பொங்கலுக்கு வெளியாகும் எனவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்