இலங்கையில் கோடரியால் கணவன் கொத்தியதில் மனைவி மரணம்
![இலங்கையில் கோடரியால் கணவன் கொத்தியதில் மனைவி மரணம்](ptmin/uploads/news/SriLanka_renu_image_3832ec32bd.jpg)
9 மாசி 2025 ஞாயிறு 15:47 | பார்வைகள் : 540
குடும்ப தகராறு காரணமாக கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் புத்தளம், கலடிய, மியோயா பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஜெயசிங்க முதியன்சே லலானி ஆவார்.
குடும்ப தகராறு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து சென்ற மூன்று குழந்தைகளின் தாயான இவர், மத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்துவிட்டு ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கைக்குத் திரும்பி வந்து தனது மூத்த மகளுடன் தனது வீட்டில் வசித்து வந்ததுள்ளார்.
மகளின் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ள கணவர், தன்னுடன் வந்து வசிக்குமாறு கேட்ட போதிலும், தொடர்ந்து அதிகமாக குடித்துவிட்டு சண்டையிடுவதால் அங்கு செல்ல மனைவி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், சனிக்கிழமை (8) தனது மகளின் வீட்டிற்குள் நுழைந்த சந்தேக நபர் ஒரு கோடரியை எடுத்து அதன் மூலம் தனது மனைவியைத் தாக்கி, அவளைத் துரத்திச் சென்றதாகவும், கோடரி தாக்குதலில் இருந்துயக்ஷ அவளைக் காப்பாற்ற வந்த தனது 30 வயது மகளையும் தாக்கியதாகவும், இதனால் மகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
![](/images/engadapodiyalxy.jpg)