இன முரண்பாடுகளை களையும் Intouchables!!
23 கார்த்திகை 2017 வியாழன் 13:30 | பார்வைகள் : 18979
ஒரு பெரும் பணக்காரர். கழுத்துக்கு கீழ் உள்ள பகுதிகள் அனைத்தும் செயலிழந்த நிலையில் ஒரு சக்கர நாற்காலியில் தள்ளப்படுகிறார். குளிப்பதற்கும், உடை அணிவதற்கும்.. சாப்பிடுவதற்கு கூட ஒருவரின் உதவி இல்லாமல் இயங்க முடியாது. அவருக்கு உதவ சிலர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும், ஒரு வித இரக்கத்துடன் குறித்த பணக்காரரிடம் நடந்துகொள்கின்றனர்.
இந்த கழிவிரக்கம் அவரை எரிச்சலடைய வைக்கிறது. அப்போது தான் நாயகன் அறிமுகமாகிறார். உதவியாளராக நியமிக்கப்படும் நாயகன், குறித்த பணக்காரரை எவ்வித பாகுபாடும் பார்க்காமல் சக மனிதன் போல் நடத்துகிறான். இது அவருக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அதைத் தொடர்ந்து இடம்பெறும் சம்பவங்களின் கோர்வை தான், 2011 ஆம் ஆண்டு வெளியான Intouchables பிரெஞ்சு திரைப்படத்தின் கதை! இது ஒரு உண்மைச் சம்பவமும் கூட.
இத்திரைப்படத்தின் கதையை எங்கயோ கேள்விப்பட்டிருக்கோமே... என யோசிக்கிறீர்களா..? தமிழில் கார்தி, நாகார்ஜூனா நடிப்பில் வெளியான 'தோழா' திரைப்படத்தின் கதையும் இதே தான். பிரெஞ்சில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கும்.. பின்னர் தமிழுக்கும் உருமாறியது. அதை விட்டுவிடலாம்.
இந்திய 'வெர்ஷன்'களை விடவும், பிரெஞ்சு Intouchables திரைப்படத்துக்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. பணக்காரருக்கும் அவரின் உதவியாளருக்கும் இடையில் இடம்பெறும் நட்பு தொடர்பானது தான் மொத்த கதை. இதற்கு இயக்குனர் மேற்கொண்ட மற்றுமொரு யுக்தி இனவாதத்தை எதிர்த்து அமைத்த திரைக்கதை. 'பிலிப்' எனும் பணக்காரர் கதாபாத்திரத்தை பிரெஞ்சு வெள்ளையர் எனவும், உதவியாளராக வரும் Bakary "Driss" Bassari எனும் கதாப்பாத்திரத்தை கருப்பு இனமாகவும் சித்தரித்ததே. இதில் Bakary "Driss" Bassari தான் கதாநாயகன்.
பணக்காரராக François Cluzet, உதவியாளராக Omar Sy உம் மிக திறம்பட நடித்திருப்பார்கள். 'கருப்பு-வெள்ளை' பிரச்சனை எத்தனை முரண்பாடுகளை கொண்டது என்பது நீங்கள் அறிந்ததே. அதை எல்லாம் சினிமா எனும் ஊடகம் மூலம் உடைத்தெறிந்த இரட்டை இயக்குனர்கள் Olivier Nakache & Éric Toledano ஆகியோருக்கு ஒரு பெரிய saluet!!
இந்த திரைப்படம் பல வசூல் சாதனைகளை செய்த முக்கியமான திரைப்படம். இது குறித்த சுவாரஷ்யமான பட்டியல் ஒன்று நாளை பார்க்கலாம்..!!