செயற்கை நுண்ணறிவுக்கு 109 பில்லியன் யூரோக்கள் முதலிடும் பிரான்ஸ்!!
![செயற்கை நுண்ணறிவுக்கு 109 பில்லியன் யூரோக்கள் முதலிடும் பிரான்ஸ்!!](ptmin/uploads/news/France_rajeevan_GjXvL-_XwAANwRG.jpg)
10 மாசி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 1437
செயற்கை நுண்ணறிவு மாநாடு இன்று பெப்ரவரி 10 மற்றும் நாளை 11 ஆம் திகதி ஆகிய நாட்களில் இடம்பெற உள்ளது. பிரான்ஸ் தலைமையேற்கும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து பல தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு France 2 தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி மக்ரோன், “பிரான்ஸ் 109 பில்லியன் யூரோக்களை இந்த செயற்கை நுண்ணறிவுக்காக முதலிட உள்ளது” என தெரிவித்தார்.
இன்று 40,000 இளைஞர்-யுவதிகள் செயற்கை நுண்ணறிவுக்காக பணியாற்றி வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக அதிகரிக்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
”நாம் இதனை எப்படு செயற்படுத்துகிறோம் என்பதற்கு முதல், நாம் இந்த பந்தயத்தில் இருக்க வேண்டும்.” என மக்ரோன் குறிப்பிட்டார்.
![](/images/engadapodiyalxy.jpg)