கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்து - இருவர் பலி

10 மாசி 2025 திங்கள் 09:14 | பார்வைகள் : 2592
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
80 வயதான ஆண் ஒருவரும், 77 வயதான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் ஒன்றாரியோவின் மிட்லாண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இருவரும் உறவினர்களா என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.