யாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே கடும் மோதல்
10 மாசி 2025 திங்கள் 09:22 | பார்வைகள் : 4636
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடபுதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதன்போது நான்காம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த மாணவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக உள்ளக மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan