ஒரு மாவட்டம் முழுவதையும் கைப்பற்றிய நிறுவனம்!!
22 கார்த்திகை 2017 புதன் 10:30 | பார்வைகள் : 19241
பிரான்சின் பல்வேறு உற்பத்தி பொருட்களில் மிக முக்கியமானது திராட்சை. மிக அதிகளவான திராட்சை தோட்டங்களும்.. உலகின் சிறந்த 'வைன்'களும் இங்கே உற்பத்தியாகின்றன. சரி.. ஒரு நிறுவனம், தனக்கென ஒரு மாவட்டத்தை மொத்தமாக சொந்தமாக வைத்துள்ளது. பார்க்கலாமா??
பிரெஞ்சு வைன்களின் மிக விலைமதிப்பு அதிகம் கொண்டதும், மிக சுவையான வைனுமாக அறியப்பட்ட Bordeaux, விற்பனையிலும் சக்கை போடு போடுகிறது. இருக்கட்டும் பிரான்சின் தென்மேற்கு மாகாணம் ஒன்றின் பெயரைத் தான் இந்த வைன் நிறுவனத்துக்கும் வைத்துள்ளார்கள் என்பது நீங்கள் அறிந்தது தான். குறித்த இந்த மாகாணம் முழுவது திராட்சை திராட்சை.. திராட்சை மட்டுமே. இதில் உள்ள ஒரு மாவட்டம் தான் Gironde.
இந்த Gironde மாவட்டத்தின் அனைத்து நிலப்பரப்பில் விளையும் திராட்சைகள் அனைத்திற்கும் சொந்தகாரர் Bordeaux நிறுவனம் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா??
குறித்த நிறுவனத்தில் இருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் சிவப்பு வைன், கறுப்பு வைன், ரோஸ் வைன் என பல்வேறு உற்பத்திகளும், vintages என அழைக்கப்படும் பண்டைய கால உற்பத்திகளும் மகா பிரபலம். இந்த மாவட்டம் உள்ளிட்ட அனைத்து பிராந்தியங்களிலும் 1 ஆம் நூற்றாண்டில் இருந்து திராட்சைகள் பயிரிடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது.
சரி, நாம் முடிவுக்கு வருவோம். Gironde மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு திராட்சை கொடிகளும் Bordeaux நிறுவனத்துக்குச் சொந்தம். கிட்டத்தட்ட 120,000 ஹெக்டேயர்கள் நிலப்பரப்பில் விளைகிறது இவர்கள் தோட்டம். மயக்கம் வருகிறதா??!!