காட்டுப்பகுதியைச் சல்லடை போடும் காவற்துறையினர்!!
![காட்டுப்பகுதியைச் சல்லடை போடும் காவற்துறையினர்!!](ptmin/uploads/news/France_jana_SEARCH.jpg)
10 மாசி 2025 திங்கள் 09:43 | பார்வைகள் : 1968
லூயிஸ் எனும் பதினொரு வயதுச் சிறுமியின் கொலையை அடுத்து, இந்தச் சிறுமியின் உடலம் கண்டெடுக்கப்பட்ட காட்டுப் பகுதியான எசொன் மாநிலத்தின் லோங்ஜுமோவின் (Longjumeau - Essonne) காட்டுப் பகுதி மீண்டும் சோதனைக்கு உள்ளாகி உள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை லோங்ஜுமோவின் Bois des templiers காட்டுப்பகுதி, 120 இற்கும் மேற்பட்ட காவற்துறையினரால் அங்குலம் அங்குலமாகத் தேடப்பட்டுள்ளது.
இந்தச் சிறுமியைக் கொலை செய்த ஆயுதம், மற்றும் ஏனைய தடயங்களைக் கண்டறிவதற்காக இந்தத் தேடுதல் வேட்டை நடாத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
லூயிசின் உடற்கூற்றாய்வில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட பல காயங்கள் இருந்ததாகக் காவற்துறையினரின் அறிக்கை தெரிவித்துள்ளது.
![](/images/engadapodiyalxy.jpg)