Paristamil Navigation Paristamil advert login

ஒரு டீ கடைக்கு ஒருவன் நடந்து செல்கிறான், கடைக்காரரிடம்

ஒரு டீ கடைக்கு ஒருவன் நடந்து செல்கிறான், கடைக்காரரிடம்

10 மாசி 2025 திங்கள் 09:53 | பார்வைகள் : 233


கஸ்டமர்: அண்ணா.. எனக்குஒருடீ..

கடைக்காரர்: எப்படிப்பாவேணும்..

கஸ்டமர்: என்முன்னாள்காதலிபோல..

கடைக்காரர்: கசப்பாவா?

 கஸ்டமர்: !!!

ஒரு பெரிய கிப்ட் கடைக்குள் ஒருவன் நுழைகிறான், கடை முழுக்க சுற்றி பார்த்து, தேடி தேடி எதுவும் கிடைக்காதது போல சலித்து கொள்வதை கடைக்காரர் பார்க்கிறார்,
கடைக்காரர்: தம்பி.. தம்பி.. என்னப்பா.. என்னவேணும்

கஸ்டமர்: என் மனைவிக்கு ஒரு நல்ல கிபிட் தேடுறேன் சார்.. ஆனால் அது மாதிரி ஏதும் கிடைக்கலை

கடைக்காரர்: கவலையை விடுங்க தம்பி.. உங்க மனைவி இப்போ எதை ரொம்ப விரும்பி தேடுறாங்க?

கஸ்டமர்: நல்ல விவாகரத்து வழக்கறிஞரை...

கடைக்காரர்: !!!

ஒரு கர்ப்பிணி பெண், துணிக்கடை ஒன்றிற்கு போன் செய்கிறார்,

கஸ்டமர்: ஹலோ.. துணிக்கடை தானே? கடைக்காரர்: ஆமாங்க, சொல்லுங்க என்ன வேணும்?

கஸ்டமர்: நான் ஆர்டர் கொடுத்த அந்த பெரிய கர்ப்பிணி கவுன் உடையை கேன்சல் பண்ணிடுங்க..

கடைக்காரர்: ஏன்ங்க.. என்னாச்சு.. நாங்க சீக்கிரம் டெலிவரி கொடுத்திடுவோம்..

கஸ்டமர்: உங்க டெலிவரியை என் டெலிவரி முந்திடிச்சுங்க... கடைக்காரர்: !!!

 

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்