SNCF : 800 வேலை வாய்ப்புகள்!!

10 மாசி 2025 திங்கள் 14:07 | பார்வைகள் : 5093
போக்குவரத்து நிறுவனமான SNCF இவ்வாண்டில் 800 புதிய வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகள், தொடருந்து நிலைய முகவர்கள் போன்றோருக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.
400 RER சாரதிகள்,
200 தொடருந்து நிலைய முகவர்கள்,
150 தொடருந்து பராமரிப்பாளர்கள்,
30 உற்பத்தி முகவர்கள்,
20 மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலதிகாரிகள்
ஆகியோருக்கான வேலையிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற 2024 ஆம் ஆண்டில் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பை SNCF வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.