கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டா ஒன்று மீட்பு
10 மாசி 2025 திங்கள் 14:36 | பார்வைகள் : 10768
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பயண பொதிகள் பகுதிக்கு அருகில் இன்று 9 மி.மீ தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பொலிஸார் அப்பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த தோட்டாவை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan