சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி ?
![சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி ?](ptmin/uploads/news/Cinema_tharshi_sethu.jpg)
10 மாசி 2025 திங்கள் 14:48 | பார்வைகள் : 197
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரையுலக பிரபலம் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அதனை அடுத்து ’விடுதலை 2’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி ’காந்தி, டாக்கீஸ்’, ’ட்ரெயின்’ ‘ஏஸ்’ ஆகிய மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக கூறப்பட்டது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவலை திரையுலக பிரபலம் சித்ரா லட்சுமணன் மறுத்துள்ளார்.
சிறுத்தை சிவா மற்றும் விஜய் சேதுபதி கோவிலுக்கு சென்ற போது, ஒருவரை ஒருவர் தற்செயலாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பை வைத்து இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த செய்தியில் உண்மையில்லை. விஜய் சேதுபதி என்னிடம், 'சிறுத்தை சிவா இயக்கத்தில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை' என்று கூறியுள்ளார்" என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
![](/images/engadapodiyalxy.jpg)