Paristamil Navigation Paristamil advert login

காதலர் வாரத்தின் வாக்குறுதி நாளின் அர்த்தம் தெரியுமா..?

காதலர் வாரத்தின் வாக்குறுதி நாளின் அர்த்தம்  தெரியுமா..?

10 மாசி 2025 திங்கள் 14:52 | பார்வைகள் : 158


வருடந்தோறும் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் காதலர் தினத்திற்கான கொண்டாட்டங்கள் எப்போதுமே பிப்ரவரி 7-ஆம் தேதி முதலே காதலர் வாரத்துடன் தொடங்கிவிடும்.

இந்த காதலர் வாரத்தின் 5-ஆவது நாளாக வாக்குறுதி தினம் அதாவது ப்ராமிஸ் டே கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை அதாவது பிப்ரவரி 11-ஆம் தேதி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ப்ராமிஸ் டே என்பது உறவுகளை மேலும் உன்னதமாக மற்றும் நெருக்கமாக்கி கொள்ள காதல் & வாழ்க்கை துணைக்கு மனமார்ந்த உறுதிமொழிகளை செய்து கொடுப்பதற்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாளாகும். இந்த அர்த்தமுள்ள நாள் கொண்டாடப்படுவதற்கான வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான வழிகளை இங்கே பார்க்கலாம்.

ப்ராமிஸ் டே என்பது காதலர் தினத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும், உலகளவில் உறவுகளுக்குள் இந்த நாள் அன்பு மற்றும் நம்பிக்கை வலுப்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு நாளின் சரியான தோற்றம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், காதலில் சத்தியம் மற்றும் வாக்குறுதிகளை செய்து கொடுப்பது என்பது பல நூற்றாண்டுகளாக தொடரும் ஒன்று என நம்பப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் காதல் உறவுகளில் ஒருவருக்கொருவர் கொடுத்து கொள்ளும் வாக்குறுதியானது இன்றளவும் முக்கியமானதாகவே உள்ளது. எனவே இதற்கென்றே ஒரு நாளை ஸ்பெஷலாக அர்ப்பணிக்கும் பாரம்பரியமானது காதல் உறவுகள், பார்ட்னர்ஸ், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான வலுவான பிணைப்பை குறிக்கிறது.

எந்த ஒரு உறவிலும் உறுதிமொழிகள் அலல்து செய்து கொடுக்கப்படும் சத்தியங்கள் மகத்தான மதிப்பை கொண்டுள்ளன, ஏனெனில் அவை ஒருவரின் நேர்மை மற்றும் உறவில் அவர் காட்டும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.எனவே இந்த நாளில் திருமணமான தம்பதிகள், காதலர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் தங்கள் பிணைப்பை வலுப்படுத்த வார்த்தைகள் மூலமாகவோ அல்லது அர்த்தமுள்ள செயல்கள் மூலமாகவோ வாக்குறுதி கொடுக்கிறார்கள்.

இந்த சத்தியங்களில் பொதுவாக உறவில் விசுவாசம் மற்றும் நேர்மையாக இருப்பேன் என உறுதியளிப்பதிலிருந்து மகிழ்ச்சியான தருணங்களில் மட்டுமல்லாமல் கடினமான சூழ்நிலைகளில் கூட ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பது என பறைசாற்றுவது வரை பல அடக்கம். எனவே இந்த தினம் மக்கள் தங்கள் உறவுகளில் உண்மையான அர்ப்பணிப்புகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது.

உங்கள் உறவை மேலும் வலுவாக்கும் வகையில் மனமார்ந்த வாக்குறுதிகளை உங்க கைகளால் எழுதி உங்கள் துணை அல்லது அன்புக்குரியவர்களுக்கு கொடுங்கள், அவர்களையும் இதே போல செய்ய சொல்லுங்கள். இப்படி கையால் எழுதப்பட்ட குறிப்புகள் உங்கள் இருவரின் உறுதிமொழிகளுக்கான அழகான நினைவூட்டல்களாக செயல்படும்.

 உறவுகளில் நீங்கள் இருவரும் நிறைவேற்ற நினைக்கும் வாக்குறுதிகளுக்காக ஒரு ஜாடியை பிரத்தேயகமாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் அன்புக்குரியவரும் ஆண்டு முழுவதும் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள வாக்குறுதிகளை எழுதிய துண்டு சீட்டுகளால் அந்த ஜாடியை நிரப்பவும். அவ்வப்போது இந்த ஜாடியில் இருக்கும் குறிப்புகளை எடுத்து யார் முறை வருகிறதோ அவர்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் இருவருக்கும் முதல் டேட்டிங் நடந்த இடம் அல்லது உங்கள் உறவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்த ஸ்பாட்டிற்கு உங்கள் துணையை சர்ப்ரைஸாக அழைத்து செல்லலாம் அல்லது இதுவரை செல்லாத இடத்திற்கும் அவரை அழைத்து செல்லலாம். அங்கு வைத்து உங்கள் எதிர்காலம் குறித்து அர்த்தமுள்ள சத்தியங்களை ஒன்றாக செய்யலாம்.

வாக்குறுதி மோதிரம் என்பது உங்கள் அர்ப்பணிப்பை எடுத்து கூறும் காலத்தால் அழியாத சின்னமாக இருக்கும். எனவே உங்கள் உறவில் இருக்கும் அன்பு, காதல் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக ஒருவருக்கொருவர் மோதிரங்களை பரிமாறி கொள்ளுங்கள். ஒரு உறவில் உறுதிப்பாட்டை குறிக்க ப்ராமிஸ் மோதிரம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான காதலர்களுக்கு இந்த மோதிரம் என்பது அவர்கள் வாழ்வில் நிச்சயதார்த்தம் அல்லது திருமண மோதிரம் விரைவில் பரிமாறி கொள்வோம் என்ற சபதத்தின் வெளிப்பாடாக உள்ளது.

நீங்கள் ஒருவருகொருவர் வாக்குறுதி அளித்து கொள்ளும் தருணங்களை ஃபோட்டோ அல்லது வீடியோவாக எடுத்து கொள்ளலாம். இந்த சிறப்பு நாளை என்றென்றும் போற்றும் ஒரு நினைவை இதன் மூலம் உருவாக்குங்கள்.

நீங்கள் உங்கள் துணையை பார்க்க முடியாதபடி வெகுதொலைவில் இருந்தால் வீடியோ கால் செய்து ஒருவருக்கொருவர் மனமார்ந்த வாக்குறுதிகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள். உங்கள் உறுதிமொழிகளை கொண்ட டிஜிட்டல் ஸ்கிராப் புக் உங்கள் உறவில் ஒரு அற்புத நினைவுபொருளாக இருக்கலாம்.

நீண்ட காலமாக ஒன்றாக இருக்கும் தம்பதிகள் இந்த நாளை பயன்படுத்தி தங்கள் அன்பை மற்றும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தலாம், உறவு சார்ந்த எதிர்காலம் சிறப்பாக இருக்க புதிய வாக்குறுதிகளை அளிக்கலாம். குறிப்பாக இந்த நாளில் வாக்குறுதிகளை நீங்கள் எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவை உங்கள் இதயத்திலிருந்து வருவதையும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்