அட்லி அல்லு அர்ஜுனை இயக்கப் போகிறாரா ?
![அட்லி அல்லு அர்ஜுனை இயக்கப் போகிறாரா ?](ptmin/uploads/news/Cinema_tharshi_push.jpg)
10 மாசி 2025 திங்கள் 15:01 | பார்வைகள் : 226
ராஜா ராணி படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் தான் அட்லீ. எந்திரன் மற்றும் நண்பன் என்று ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் படங்களுக்கு இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலையில் ஷங்கரின் ஆசியுடன் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அப்படி அவர் இயக்கிய முதல் படம் தான் ராஜா ராணி. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார். அதுமட்டுமின்றி இன்றைய சூழலில் பலரது வாழ்க்கையில் இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கும். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
ஆனால், இந்தப் படம் மௌன ராகம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் தழுவல் என்று இயக்குநர் அட்லீ மீது விமர்சனம் எழுந்தது. இந்தப் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு மீண்டும் 2ஆவது முறையாக இணைந்து மெர்சல் படத்தை இயக்கினார். இந்தப் படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெறவே கடைசியாக விஜய்யின் பிகில் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். வரிசையாக 4 தமிழ் படங்கள் இயக்கிய நிலையில் ஹிந்தியில் அறிமுகமானார். ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை கொடுத்தார்.
இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து புதிய சாதனை படைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லயன் என்ற ஹிந்தி படத்தையும், ஆலா வைகுந்தபுரமுலூ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கையும் இயக்கி வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து இப்போது புதிதாக நடிகர் அல்லு அர்ஜூன் உடனும் இணைந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடைசியாக புஷ்பா 2 படம் வெளியானது. இந்தப் படம் வெளியான போது ரசிகை உயிரிழந்தது, அல்லு அர்ஜூன் சிறைக்கு சென்றது என்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படத்தின் வசூலிலுக்கு மட்டும் எந்த பிரச்சனையு. வரவில்லை. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரூ.1700 கோடி வரையில் வசூல் குவித்தது.
புஷ்பா 2 படத்தில் மற்ற நடிகர், நடிகைகளின் நடிப்பை விட அல்லு அர்ஜூனின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அதுவும், சேலை கட்டி நடனம் ஆடுவதும் சரி, சண்டைக் காட்சியில் நடித்திருந்ததும் சரி ரசிகர்களை வியக்க வைத்தது. இந்தப் படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நிலையில் தான் இந்தப் படத்திற்கு பிறகு இப்போது அவர் இயக்குநர் அட்லியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக புதிதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது. புஷ்பா 2 வெற்றிக்குப் பிறகு, இந்த கூட்டணி உறுதியாகியுள்ளது. புஷ்பா 2 வெற்றிக்குப் பிறகு, பல முன்னணி இயக்குநர்கள் அல்லு அர்ஜூனை நோக்கித் திரும்பியுள்ளனர். 'ஜவான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கின. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படம் பான் இந்தியா படமாக ஆக்ஷன் கதையில் இந்தப் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
![](/images/engadapodiyalxy.jpg)