கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

10 மாசி 2025 திங்கள் 15:20 | பார்வைகள் : 2378
கருப்பு உலர் திராட்சை நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் ஒரு சுவையான மற்றும் சத்தான சூப்பர்ஃபுட் ஆகும். இதில் நிறைந்துள்ள அத்தியாவசிய வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வும் சிறப்பாக இருக்க பங்களிக்கின்றன.
இந்த சிறிய, இனிப்பு சுவை நிறைந்த சூப்பர்ஃபுட்டானது செரிமான ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் இருந்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை நாம் கற்பனை செய்யாத பல அற்புத நன்மைகளை வழங்கும் என்று உங்களுக்கு தெரியுமா.!! இந்த சூப்பர் ஃபுட்டை எப்படி எடுத்து கொள்வது மற்றும் டயட்டில் இதை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்...
கருப்பு உலர் திராட்சையை உட்கொள்வதற்கான எளிய வழி, இதன் 5 பீஸ்களை எடுத்து கொண்டு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆகும். தண்ணீரில் ஊறவைப்பது இவற்றின் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது மற்றும் அவற்றை ஜீரணிப்பதை எளிதாக்குகிறது. தவிர 5 முதல் 10 கருப்பு உலர் திராட்சையை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி, பின் அதனை 2 - 3 மிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து எடுத்து கொண்டு, அதில் சிறிது கருப்பு உப்பு மற்றும் மிளகு பொடி தூவி சாப்பிடலாம்.
கருப்பு உலர் திராட்சையில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்ஸ்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. அடிக்கடி இதனை சாப்பிட்டு வருவது சளி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளை தடுக்க உதவும். இதிலுள்ள இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த சூப்பர் ஃபுட் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதில் இயற்கை இனிப்பு இருந்தாலும், குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸை கொண்டுள்ளதால் மிதமாக சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவும். 2017-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கருப்பு உலர் திராட்சையை எடுத்து கொள்வது மற்ற கார்போஹைட்ரேட் நிறைந்த ஸ்னாக்ஸ்களுடன் ஒப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவியதாக கூறப்பட்டுள்ளது.
இதில் போரான் மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதிலிருக்கும் போரான் எலும்பு உருவாவதற்கு உதவுகிறது மற்றும் கால்சியம் உறிஞ்சலை அதிகரிக்கிறது. இதிலிருக்கும் பொட்டாசியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை தடுக்கிறது.
உண்மையில் இந்த உலர் திராட்சை மலமிளக்கி பண்புகளுக்கு பெயர் பெற்றது என்பதால், மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதிலுள்ள டயட்ரி ஃபைபர் சத்து செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கும் மற்றும் உப்புசத்தை தடுக்கிறது.
ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையை சாப்பிடுவதன் மூலம் உங்கள் நாளை துவக்குவது இயற்கையாகவே இதய ஆரோக்கியத்தை சிறப்பாக்கும். இதிலிருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தம் கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைக்க உதவுகின்றன. மேலும் இந்த திராட்சை தமனிகளில் படிந்திருக்கும் plaque-ஐ சுத்தம் செய்ய உதவுகிறது. செல்களில் ஏற்படும் இன்ஃபளமேஷனை கட்டுப்படுத்த உதவும் ரெஸ்வெராட்ரோல் காம்பவுன்ட் இதில் உள்ளது, இது ஒரு இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும்.
- உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் சாப்பிடுவதற்கு முன் இந்த சூப்பர் ஃபுட் எடுப்பது பசியை கட்டுப்படுத்த மற்றும் எடையை குறைக்க உதவும். அதிக நார்ச்சத்து மற்றும் இயற்கை இனிப்பு இருப்பதன் காரணமாக வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், செரிமான செயல்முறையை மெதுவாக்குவதன் மூலமும் அதீத பசி அலல்து தேவையற்ற ஜங்ஃபுட்ஸ்களை சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது.
- இந்த திராட்சையில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு செல் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது, இது சருமத்தில் இருக்கும் வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான நிறத்தை அளிக்கிறது. இதிலிருக்கும் இரும்புச் சத்து கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது, இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையைப் பராமரிக்கிறது. கூந்தலின் ஃபாலிக்கல்ஸ்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலமும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலமும் முடி உதிர்வை குறைக்கிறது.
பல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றாலும் இதை நீங்கள் சாப்பிடலாம். கால்சியம் நிறைந்த இந்த சூப்பர்ஃபுட், பல் எனாமலை மீண்டும் கனிமமாக்க (remineralise) உதவுகிறது, பல் வீக்கம் மற்றும் ஈறு வீக்கத்தை குறைக்கிறது. இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் பல் சிதைவு மற்றும் சொத்தை ஏற்படுத்தும் பாக்டீரியா அல்லது நுண்ணுயிரிகளை அகற்றுகிறது. துவாரங்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.