Paristamil Navigation Paristamil advert login

Orly : விமானத்தில் இருந்து வெளியே பாய்ந்த பயணியால் பரபரப்பு!!

Orly : விமானத்தில் இருந்து வெளியே பாய்ந்த பயணியால் பரபரப்பு!!

11 மாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1389


புறப்படத்தயாராக இருந்த விமானம் ஒன்றில் இருந்து பயணி ஒருவர் வெளியே பாய்ந்த சம்பவம் ஒன்று Orly விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Iberia நிறுவனத்துக்குச் சொந்தமான Airbus A320 விமானம் ஒன்று Paris-Madrid நகரங்களிடையே பணிக்க தயாராகிக்கொண்டிருந்தது. அதன்போது, பயணி ஒருவர் விமான பணிப்பெண் ஒருவரை தாக்கிவிட்டு, அவசரகாலத்தின் போது பயன்படுத்தப்படும் கதவினை தள்ளிக்கொண்டு வெளியே பாய்ந்துள்ளார்.

இத்தகவலை பரிஸ் விமான நிலையங்களுக்கான கட்டுப்பாட்டகம் (ADP) ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்துள்ளது. மேற்படி செயலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.



 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்