Paristamil Navigation Paristamil advert login

அழகிய தேசம் Grande Île!! - சில தகவல்கள்!!

அழகிய தேசம் Grande Île!!  - சில தகவல்கள்!!

23 சித்திரை 2017 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18444


Grand Est மாகாணம். அதன் தலைநகர் Strasbourg. இங்கு அமைந்துள்ளது Grande Île. Grande Île என்றால் 'பெரிய தீவு!' என அர்த்தம். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். தற்போது இங்கு பெரியளவில் குடியேற்றங்கள் இல்லை என்றாலும், பழமை வாய்ந்த கட்டிடங்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கிறது. 
 
 இதற்கு பழைய நகரம் எனவும் ஒரு பெயர் உள்ளது. ஆனால் இது உண்மையில் ஒரு தீவா என்றால்.. இல்லை. ஆனால் இந்த நகரத்தைச் சுற்றிலும் ஆறு ஓடுகிறது. ஒரு புறம் Jura mountains இல் ஆரம்பிக்கும் Ill நதி பாய்கிறது. மறு புறம் Canal du Faux-Rempart நதி பாய, இந்த நகரம் 'தீவு' என குறிப்பிடப்படுகிறது. 
 
1988 ஆம் ஆண்டு, யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இந்த நகரம் பதிவானது. சில இடங்களில் இப்பகுதி, ellipse insulaire எனவும் குறிப்பிடப்படுகிறது. காரணம் இந்த நகரத்தின் வடிவம் அப்படி. ஒரு கோழி முட்டை போன்று 'ஓவல்' வடிவானது இது. 
 
1.25 கிலோ மீட்டர்கள் நீளமும், 0.75 கிலோ மீட்டர்கள் அகலமும் கொண்ட நகரம் இது. 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்ட்ட இந்த நகரத்தில் உள்ள ஒரு தேவாலயம் உலகப்புகழ் பெற்றது. உலகத்தில் உள்ள நான்காவது மிக உயரமான தேவாலயம் ஒன்று இங்கு உள்ளது. இது குறித்த பிறிதொரு பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம். 
 
இங்கு பல தேவாலயங்கள், உணவு விடுதிகள் என எல்லாமே பழமை வாய்ந்ததாக உள்ளது. 18 ஆம் நூற்றாண்டைச் சேந்த hôtel particulier உணவகம் ஒன்று இங்கு உள்ளது. கோட்டை ஒன்றின் அகழி எப்படி இருக்கும்? அது போலே இந்த நகரத்தைச் சுற்றி அருவி பாய்வதால், இந்த நகரத்துக்குள் நுழைவதற்கு 22 பாலங்கள் அமைத்துள்ளனர். 
 
நீங்கள் ஒரு பழமை விரும்பி என்றால்... உங்களுக்கு பழமையான கட்டிடக்கலைகளை தரிசிக்கவேண்டும் என்றால்... உங்களுக்கு மிக சரியான இடம் இதுதான். கட்டிடத்தின் சுவற்றில்.. அதன் கூரையில்... அதன் கதவு இடுக்கில் என எங்கும் பழமை நிறைந்து உள்ளது. அதை கிளிக்குஞ்சைப் போல் பொத்தி பாதுகாக்கிறது அரசு!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்