Paristamil Navigation Paristamil advert login

குடும்பத் தகராறு - இலங்கையில் குழந்தையுடன் தீ வைத்துக் கொண்ட பெண் 

குடும்பத் தகராறு - இலங்கையில் குழந்தையுடன் தீ வைத்துக் கொண்ட பெண் 

16 பங்குனி 2025 ஞாயிறு 10:55 | பார்வைகள் : 416


குடும்பத் தகராறு காரணமாக தம்புள்ளை கண்டலம பகுதியில் பெண் ஒருவர் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்றுடன் தீ வைத்துக் கொண்டுள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் காயமடைந்த தாய் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
கடுமையான தீக்காயங்களுக்குள்ளான குழந்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
குறித்த பெண் 3 பிள்ளைகளின் தாய் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 
 
தீக்காயத்திற்குள்ளான பெண்ணுக்கும், கணவருக்கும் இடையில் ஏற்படும் தகராறின் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மன உளைச்சலுக்குள்ளாகியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 
 
கடும் மன உளைச்சலின் காரணமாகவே தனது குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்ததாகக் காயமடைந்த பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். 
 
அந்தப் பெண்ணுக்கு 7 வயதும், 9 வயதுமுடைய இரு பிள்ளைகளும் இதன் போது பாடசாலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
குறித்த பெண் தனது வீட்டிலுள்ள அறையில் இவ்வாறு உடலுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளதாகவும் பின்னர் கணவர் குழந்தையின் உடலில் தீயை அணைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்