அஜித் படத்தில் சிம்பு நடித்திருக்கிறாரா?

16 பங்குனி 2025 ஞாயிறு 12:35 | பார்வைகள் : 369
அஜித்தின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுவது அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜீத், த்ரிஷா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பிரபல நடிகர் சிறப்பு தோற்றத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த பிரபல நடிகர் சிம்பு தான் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் நட்புக்காக ’குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் மிக தீவிர ரசிகர் சிம்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.