வட மாசிடோனியா இரவு நேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து - 51 பேர் பலி

16 பங்குனி 2025 ஞாயிறு 16:18 | பார்வைகள் : 504
தென்கிழக்கு ஐரோப்பாவில் வட மாசிடோனியா நாட்டின் கோகனி நகரில் இரவுநேர கேளிக்கை விடுதியொன்றில் ஏற்பட்டதீவிபத்து காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீவிபத்து காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இசைநிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை நள்ளிரவு 2 மணியளவில் சிலர் மேடையில் பட்டாசுகளை வெடித்தும், வான வேடிக்கை நடத்தியும் கொண்டாடியுள்ளனர்.
இதன் காரணமாக தீ மூண்டதுடன், அவ்வேளை அங்கு 1500க்கும் அதிகமானவர்கள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் இந்த தீ விபத்தில் 51 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.