Paristamil Navigation Paristamil advert login

பாடசாலைக்கு ஆயுதத்துடன் வந்த குடும்பத்தினர்... மூவர் கைது!!

பாடசாலைக்கு ஆயுதத்துடன் வந்த குடும்பத்தினர்... மூவர் கைது!!

16 பங்குனி 2025 ஞாயிறு 17:55 | பார்வைகள் : 2334


பெண் ஒருவரும் அவரது இரு மகன்களும் ஆயுதம் ஒன்றை எடுத்துக்கொண்டு பாடசாலை ஒன்றுக்கு வந்து அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் Yvelines மாவட்டத்தின் Poisy நகரில் இடம்பெற்றது. Le Corbusier பாடசாலையின் வளாகத்துக்கிள் மார்ச் 14, வெள்ளிக்கிழமை நண்பகல் மூவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இரு ஆண்களும், அவரது தாயும் குறித்த மூவராவர். எவ்வித அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கு முன்னர் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஒருவருடம் கூரான கத்தி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடைய நோக்கம் குறித்து அறிய முடியவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்