Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-France - சில குறிப்புகள்!!

Hauts-de-France -  சில குறிப்புகள்!!

22 சித்திரை 2017 சனி 18:30 | பார்வைகள் : 18625


Hauts-de-France என்றால் "மேலே உள்ள பிரான்ஸ்" என அர்த்தம். எதற்கு மேலே?? பிரான்ஸ் நிலப்பரப்பில் மேலே உள்ளது Hauts-de-France!! இன்றைய பிரெஞ்சு புதினத்தில் Hauts-de-France மாகாணம் குறித்து பார்க்கலாம்!!
 
இல்-து-பிராம்ஸ் மாகாணத்தோடு ஒட்டிப்பிறந்த மாகாணம் இது. மொத்தம் ஐந்து மாவட்டங்களை கொண்ட இந்த மாகாணத்தின் தலை நகர் 
Lille ஆகும். ஐந்து மாவட்டங்களானவை... Aisne, Nord, Oise, Pas-de-Calais, Somme ஆகும். மாகாண முதல்வர் Xavier Bertrand ஆவார். 
 
மொத்த நிலப்பரப்பு 31,813 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 5,973,098 மக்கள் இங்கு வசிக்கின்றனர். முன்னர் ஒரு குட்டி மாகாணமாக இருந்த Hauts-de-France மாகாணம், தற்போது  Nord-Pas-de-Calais மற்றும் Picardy ஆகிய பகுதிகளை இணைத்தே தற்போதுள்ள Hauts-de-France மாகாணம் உருவாக்கப்பட்டது. அப்படி இணைக்கப்பட்டபோது 'Nord-Pas-de-Calais-Picardie' எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. அகர வரிசைப்படி இரண்டு பெயர்களையும் இணைத்தும் 'என்னுடைய மாவட்டத்தை  எப்படி பின்னால் இணைக்கலாம்... அதை முன்னால் போட்டு இதை பின்னால் போடுங்கள்!' என்றெல்லாம் பஞ்சாயத்துக்கள் பறந்தன. 
 
அதைத் தொடர்ந்து, கடந்த வருடம் (2016) செப்டம்பர் 30 ஆம் திகதி Hauts-de-France என புது பெயர் சூட்டப்பட்டது. இதுவே தற்போது நிரந்தர பெயர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணம் வடகிழக்கில் பெல்ஜிய எல்லையையும், வட மேற்கில் ஆங்கிலக்கால்வாயையும் கொண்டுள்ளது. மாகாணத்தின் தெற்குப்பகுதியில் இல்-து-பிரான்ஸ் மாகாணத்தையும், தென் மேற்கில் Normandy மாவட்டத்தையும் கொண்டுள்ளது. 
 
மாகாணத்தின் தலைநகர் 
Nord மாவட்டத்தில் உள்ள Lille ஆகும். தலைநகரில் மட்டும் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தகவலின் படி 228,652 மக்கள் வசிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சனத்தொகை கூடிய நகரமாக 132,479 மக்கள் தொகையோடு Somme மாவட்டத்தில் உள்ள Amiens உள்ளது. 
 
இந்த மாகாணத்தில் பல சுவாரஷ்யமான இடங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் என எண்ணற்ற சுற்றுலாத்தலங்கள் உண்டு... அவை குறித்து தொடர்ந்தும் பார்க்கலாம்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்