சென்னையில் இரட்டைக்கொலை; மர்மநபர்கள் வெறிச்செயல்

17 பங்குனி 2025 திங்கள் 13:46 | பார்வைகள் : 397
சென்னையில் இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மை காலமாக போதைப்பொருட்களின் புழக்கமும், அதனால் குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், நேற்றிரவு சென்னை கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என சொல்லப்படுகிறது.
பழிக்கு பழியாக இந்தக் கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.