Paristamil Navigation Paristamil advert login

சச்சின் தலைமையில் முதல் மாஸ்டர்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற இந்திய அணி!

சச்சின் தலைமையில் முதல் மாஸ்டர்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற இந்திய அணி!

17 பங்குனி 2025 திங்கள் 03:54 | பார்வைகள் : 216


சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ராய்பூரில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடந்தது.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 148 ஓட்டங்கள் சேர்த்தது. சிம்மோன்ஸ் 57 (41) ஓட்டங்களும், டிவைன் ஸ்மித் 45 (35) ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் 17.1 ஓவரில் 149 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 50 பந்துகளில் 74 ஓட்டங்களும், சச்சின் டெண்டுல்கர் 18 பந்துகளில் 25 ஓட்டங்களும் விளாசினர்.

இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ், முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அணித்தலைவர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவில், "பார்வையாளர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் எனது இந்தியா மாஸ்டர்ஸ் அணியினர் உட்பட இந்த அனுபவத்தை மறக்க முடியாததாக மாற்றிய அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்றார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்