Paristamil Navigation Paristamil advert login

மணிக்கு 110 கி.மீ செல்லும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.., இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன…?

மணிக்கு 110 கி.மீ செல்லும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.., இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன…?

17 பங்குனி 2025 திங்கள் 03:59 | பார்வைகள் : 154


இந்திய ரயில்வேயானது ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

ஹைட்ரஜன் ரயில்

இந்திய ரயில்வே அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்தவகையில்,மார்ச் 31, 2025க்குள் ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை (Hydrogen train) இயக்கப்படவுள்ளது.

இந்த ரயிலானது சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கார்பன் வெளியேற்றத்தை குறைத்து செயல்படும். இந்த முயற்சியானது இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் முக்கிய அங்கமாக இருக்கும்.

அதாவது, நிலையான போக்குவரத்து, கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் முதல் ஹைட்ரஜன் ரயிலை இந்தியா இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில்களில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் உள்ளது.

கார்பனை வெளியேற்றாமல் வெறும் நீரையும் வெப்பத்தையும் மட்டுமே வெளியிடுகிறது. இந்த ரயிலானது டீசல் ரயில்களை விட பல சிறப்பம்சங்களை வழங்குகின்றன.

இந்த ரயிலில் இருந்து குறைவான சத்தம் மட்டுமே வருவதால் பயணிகளுக்கு அமைதியான மற்றும் வசதியான அனுபவத்தை வழங்கும்.

இந்த ரயிலானது 110 கிமீ/மணிக்கு செல்லும் திறன் கொண்டது. மேலும், இது 1,200 ஹெச்பி சக்தியுள்ள ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்தி இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 2,638 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்