Paristamil Navigation Paristamil advert login

மம்முட்டி நடிப்பில் இருந்து விலகுகிறாரா?

மம்முட்டி நடிப்பில் இருந்து விலகுகிறாரா?

17 பங்குனி 2025 திங்கள் 08:54 | பார்வைகள் : 316


மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, சில தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டதால் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை என்ற வதந்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இந்த சூழலில், மம்முட்டியின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "மம்முட்டிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் முழுக்க முழுக்க பொய்யானது. அவர் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருப்பதால்தான் படப்பிடிப்புகளில் இருந்து விடுமுறை எடுத்துள்ளார். அதனால் தான் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. ரமலான் பண்டிகை முடிந்ததும், அவர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார்," எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மம்முட்டிக்கு மட்டுமின்றி மோகன்லாலும் நடிக்கவிருக்கிறார். இருவரும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்