Paristamil Navigation Paristamil advert login

இந்தியன் 3 கைவிடப்ப்டுகிரறதா?

இந்தியன் 3 கைவிடப்ப்டுகிரறதா?

17 பங்குனி 2025 திங்கள் 08:57 | பார்வைகள் : 603


பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பான் இந்தியா அளவில் ஹிட் ஆனது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்தனர். இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் கிரிஞ்சாக இருந்ததால் படத்தை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்தனர்.

இந்தியன் 2 படத்தால் அப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது. இந்தியன் 2 படப்பிடிப்பின் போதே அதன் மூன்றாம் பாகத்திற்கான பெரும்பாலான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிட்டார் ஷங்கர். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே எஞ்சி உள்ளது. அதை எடுத்துவிட்டால் இந்தியன் 3 படமும் ரிலீசுக்கு தயாராகிவிடும். ஆனால் இந்தியன் 3 படத்திற்காக அந்த ஒரு பாடல் காட்சியை எடுக்க மட்டும் 20 கோடிக்கு மேல் ஆகும் என சொன்னாராம் ஷங்கர். இதுதவிர தனக்கு தர வேண்டிய சம்பளம் என லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார்.

அடுத்தடுத்த தோல்விகளால் நிதி நெருக்கடியில் சிக்கிய லைகா நிறுவனம், தங்களுக்கு இந்தியன் 3 படமே வேண்டாம் என சொல்லி அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாம். இதனால் இந்தியன் 3 படம் திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிக்கப்பட்டு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தற்போதுள்ள நிதி நெருக்கடியில் ஷங்கருக்கான சம்பள பிரச்சனையை பேசி முடித்து, அதன்பின் படப்பிடிப்பு நடத்தி அதை ரிலீஸ் செய்வதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நடக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

இதனால் இந்தியன் 3 படம் கிடப்பில் போடப்பட சான்ஸ் இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழு இதுபற்றி எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்தியன் 3 படத்தில் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வாலும் நடித்துள்ளார். இந்தியன் 2 புரமோஷனின் போதே தனக்கு 2ம் பாகத்தை விட 3ம் பாகம் தான் மிகவும் பிடித்திருந்தது என கமல் சொல்லி இருந்தார். தற்போது அவருக்கு பிடித்த அந்த 3ம் பாகம் ரிலீசாவதே கேள்விக்குறியாக இருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்