இலங்கையில் கோர விபத்து - 21 பேர் படுகாயம்

17 பங்குனி 2025 திங்கள் 11:34 | பார்வைகள் : 557
சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
நிக்கவெரட்டியவிலிருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை கொழும்புக்குச் சென்ற இ.போ.சபை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரம், கடை மற்றும் ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.