சிகரெட் விற்பனை வரலாறுகாணாத வீழ்ச்சி!!

17 பங்குனி 2025 திங்கள் 11:47 | பார்வைகள் : 1684
பிரான்சில் சிகரெட் விற்பனை முன்னர் எப்போதும் இல்லாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. சிகரெட் மீது கொண்டுவந்த விலையேற்றமே இந்த விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் 1.3 பில்லியன் சிகரெட் பெட்டிகள் பிரான்சில் விற்பனையாது. முந்தைய 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12% சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனையாகியிருந்தது.
சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது 2024 ஆம் ஆண்டில் €13 பில்லியன் யூரோக்கள் வரி அறவிடப்பட்டிருந்தது. இந்த வரி அறவீட்டினால் சிகரெட் விலையும் அதிகரித்திருந்தது. விலை அதிகரிப்பினால் சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் புகைப்பழக்கதத்தினால் ஆண்டுக்கு சராசரியாக 80,000 பேர் பலியாகிறதாக சுகாதார மையம் அறிவித்துள்ளது.