Paristamil Navigation Paristamil advert login

Brittany மாகாணம்! - சில தகவல்கள்!!

Brittany மாகாணம்! - சில தகவல்கள்!!

19 சித்திரை 2017 புதன் 10:30 | பார்வைகள் : 18400


பிரான்ஸ் 18 மாகாணங்களால் சேர்ந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இதில் இல்-து-பிரான்ஸ் மாகாணம் மிக நெருக்கமான, 'பிஸி'யான மாகாணம். ஆனால் இன்று நான்கு மாவட்டங்களை கொண்ட Brittany மாகாணம் குறித்து சில தகவ்ல்களை பார்க்கலாம். 
 
இந்த மாகாணம் 1941 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு முன்னதாகவும் இந்த மாகாணம் Brittany ஆகத்தான் இருந்தது. ஆனால் சில மாவட்டங்களை இணைத்து  
Rennes'ஐ தலைநகராக கொண்டுள்ள தற்போதைய Brittany 1941  ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
 
Brittany இல் மொத்தம் நான்கு மாவட்டங்கள், Côtes-d'Armor, Finistère, Ille-et-Vilaine, Morbihan என உள்ள நான்கு மாவட்டங்களின் தலைநகர் Rennes, Ille-et-Vilaine இல் உள்ளது. மொத்தம் 26,208 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டது Brittany. 
 
மொத்த சனத்தொகை 32,37,097. (2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி) பிரித்தானியாவில் இருந்து ஆரம்ப காலங்களின் குடியேறிய மக்கள் இங்கு வசித்ததால், Brittany என பெயர் வந்ததாக சில தரவுகள் தெரிவிக்கின்றன. 
 
இத்தாலி - ரோமனில் இருந்து உருவான Gallo எனும் மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. குறித்த இந்த மொழி பிரான்சில் 28,000 ஆயிரம் பேர்களால் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தவிர இங்கு d'oïl எனும் மொழியும் பரவலாக பேசப்படுகிறது. 
 
Brittany இல் அதிக சனத்தொகை தொண்ட நகரமாக, தலைநகர் Rennes உள்ளது. மொத்தம் 2,07,922 மக்கள் தொகை! இரண்டாவது இடத்தில் Brest உள்ளது. எண்ணிக்கையில் 142,722 தொகை ஆகும். 
 
பல கடற்கரைகளை கொண்ட இந்த மாகாணத்துக்கு, சுற்றுலாத்துறையினரின் வருகை பெரும் வரப்பிரசாதம். சுற்றுலாப்பயணிகளை மையமாகக்கொண்ட தொழில்கள் இங்கு அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. 
 
 
 
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்