யாழில் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு

17 பங்குனி 2025 திங்கள் 12:53 | பார்வைகள் : 1590
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ளதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆறு மாத கர்ப்பிணியாக பெண் குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில், வீட்டாரால் காப்பற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.