சூர்யா எடுத்த அதிரடி முடிவு..!

17 பங்குனி 2025 திங்கள் 15:17 | பார்வைகள் : 447
சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலை செய்யாததால், அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது சூர்யா ’கங்குவா’ தயாரிப்பாளருக்கு ஆதரவாக முடிவெடுத்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’கங்குவா’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஆனால், அது மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இதன் காரணமாக, இதே நிறுவனம் தயாரித்த கார்த்தியின் ’வா வாத்தியாரே" திரைப்படமும் ரிலீஸ் செய்ய முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யா ’கங்குவா’ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உதவ முன்வந்து, அவருடைய தயாரிப்பில் மீண்டும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு மற்றும் மலையாள இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சூர்யா நடிக்கும் இரண்டு புதிய படங்களை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.