கங்குலி நடிகராக அறிமுகமாகிறாரா?

17 பங்குனி 2025 திங்கள் 15:24 | பார்வைகள் : 465
கிரிக்கெட்டர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. ‘எம்.எஸ்.தோனி: அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் உருவான இந்தப் படத்தை நீரஜ் பாண்டே இயக்கியிருந்தார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள வெப்சீரிஸ் ‘Khakee: The Bengal Chapter’.
நெட்ஃபிளிக்ஸில் வரும் 20-ம் தேதி இந்த தொடர் வெளியாக உள்ளது. இந்த தொடரின் புரமோஷனுக்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் போலீஸ்காரர் கெட்டப்பில் லத்தியை வைத்துக்கொண்டு ஜாலியாக சம்பவம் செய்கிறார்.
குறிப்பாக லத்தியை வைத்து அவர் அடிக்கும் கவர் டிரைவ் ஷாட்ஸ்கள் ரசிக்க வைக்கின்றன. புரமோஷனுக்காக கங்குலி நடித்து கொடுத்த இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இதனை ஷேர் செய்து கங்குலி நடிகராக அறிமுகமாகிறார் என ஆச்சரியமடைந்துள்ளனர். ஆனால் உண்மை அப்படியில்லாத நிலையில், படக்குழு நினைத்த புரமோஷன் யுக்தி கைகூடியுள்ளது.