Paristamil Navigation Paristamil advert login

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம்

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம்

17 பங்குனி 2025 திங்கள் 15:30 | பார்வைகள் : 317


இனிப்பு வகைகள் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ஆகும். அதில் குறிப்பாக பாயாசம்.எந்த ஒரு விஷேசம் என்றாலும் பாயாசம் இல்லாமல் விருந்து முழுமையடையாது. அந்த வகையில் சர்க்கரை வள்ளி கிழங்கு வைத்து சுவையான பாயாசம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்... 2 சர்க்கரைவள்ளி கிழங்கு, 1 டேபிள் ஸ்பூன் நெய், தேவையான அளவு தண்ணீர், சிறிய அளவிலான ஜவ்வரிசி, 1/2 லிட்டர் காய்ச்சிய பால், 1/4 கப் மில்க் மெய்ட், ஏலக்காய் சிறிதளவு, நெய்யில் வறுத்த பாதாம் பருப்பு, முந்திரி, சர்க்கரை பாகு 2 கப்.

முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை தோல் சீவி எடுத்து பின்னர் அதனை துருகி எடுத்துக் கொள்ள வேண்டும். துருகி எடுத்த கிழங்கை 2 நிமிடங்கள் தண்ணீரில் ஊர வைத்து பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் நெய் சேர்த்து கிழங்கு துருவலை சேர்த்து வதக்கி விட்டு பிறகு கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஜவ்வரிசி சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும். பிறகு காய்ச்சிய பால் சேர்த்து 8 நிமிடம் கொதிக்க விடவும்.

ஜவ்வரிசி மற்றும் கிழங்கு நன்கு வெந்ததும் மில்க் மெய்டு சேர்த்து ஏலக்காய் தூள் சேர்க்கவும். பிறகு நன்கு ஆறியதும் சர்க்கரை பாகு சேர்த்து அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி பாதாம் சேர்த்து மிக்ஸ் செய்தால் டேஸ்டியான சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம் ரெடி.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்