கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்திலே உயிரிழந்த அவுஸ்திரேலியா வீரர்

17 பங்குனி 2025 திங்கள் 16:02 | பார்வைகள் : 176
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் விளையாடும் போது மைதானத்தில் உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அவுஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் அணியின் வீரர் ஜுனைத் ஜாபர் கான்(Junaid Zafar Khan).
40 வயதான இவர் அங்குள்ள ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், மைதானத்திலே உயிரிழந்துள்ளார்.
போட்டி நடைபெற்ற நேரத்தில், அங்கு 41.7°C (107°F) வெப்பநிலை நிலவியுள்ளது. மேலும் இவர் போட்டியின் போது ரம்ஜானுக்காக நோன்பு இருந்துள்ளார்.
அவரின் மறைவிற்கு சக வீரர்கள் மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளது.