இன்று பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

18 பங்குனி 2025 செவ்வாய் 04:44 | பார்வைகள் : 121
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் நாசா, ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு திரும்புகின்றனர்.
விண்வெளி நிலையத்தில் இருந்து க்ரூ டிராகன் விண்கலத்திற்கு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சென்றனர்.
அமெரிக்க நேரப்படி, நேற்று இரவு 10.45 மணிக்கு க்ரூ விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு விண்கலம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை நாசா தனது எக்ஸ் பக்கத்தில் நேரலை செய்கிறது. வானிலை சீராக இருக்கும்பட்சத்தில் மாலை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமியை வந்தடைவர்.