அதிரடி சரவெடி - Gendarmerie nationale !!
17 சித்திரை 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 18670
முன்னர் ஒருதடவை பிரெஞ்சு புதினத்தில் RAiD படையினர் குறித்து பார்வையிட்டிருந்தோம். அவர்களை பற்றி தெரிந்துகொண்டால்... நிச்சயம் இவர்களை பற்றிதும் தெரிந்துகொள்ள வேண்டும். ஜோந்தாமினர்கள் களத்தில் இருந்தால்... அங்கு அதிரடி தான்!!
பிரான்சில் இருக்கும் இரண்டு தேசிய காவல்துறை பிரிவில், ஒன்று தான் Gendarmerie nationale!! பிரெஞ்சு தேசத்தின் சகல மண்ணிலும் கால் வைப்பார்கள்... கிராமம்.. நகரம்.. மாகாணம் என்ற எல்லைகள் இவர்களுக்கு இல்லவே இல்லை!! 674,843 சதுர கிலோ மீட்டர்களை ஆள்கின்றனர்.
2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி மொத்தம் ஒரு இலட்சம் (100,000) வீரர்கள் உள்ளனர் இப்பிரிவில். மேலும் 25,000 வீரர்கள் பணிக்கு வராமல் இருப்பில் இருக்கின்றனர்.
உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்றனர். அரச பணி... அவசர பணி... எதுவானாலும் ஜோந்தாமினர்கள் தான். பிரெஞ்சு நீதித்துறைக்கும் கணிசமான சேவைகளை செய்கின்றனர்.
ஜோந்தாமினர்களுக்கு என தனி சைஃபர் கிரைம் (cybercrime) உள்ளது. பயங்கரவாதம் உட்பட இணையம்... கணனி.. என டெலிகிராம் வரை எதில் சட்டவிரோத செயல் மேற்கொண்டாலும், குறுக்கே கட்டையை போட்டு, எதிரே நிற்பார்கள்.
பிரான்சின் மிக பழமையான காவல்துறையினர் இவர்கள் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? Maréchaussée எனும் பெயரில் இவர்களின் சேவைகள் ஆரம்பித்தன. 1791 ஆம் ஆண்டு!!
ஜோந்தாமினர்களின் சேவை பிரான்ஸ் மட்டுமில்லாது, Syria, Lebanon, Algeria,, Kosovo, Rwanda, Ivory Coast, Bosnia-Herzegovina, Haiti
, Central Africa, Macedonia, Afghanistan
போன்ற நாடுகளிலும் தங்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
எண்ணற்ற நிரந்தர சேவைகள், திடீர் சேவைகள் என பல சேவைகளை ஜோந்தாமினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.