Paristamil Navigation Paristamil advert login

தொடர் நாயகி விருதை வென்ற இலங்கை கேப்டன்: மழையால் நின்ற கடைசி போட்டி

தொடர் நாயகி விருதை வென்ற இலங்கை கேப்டன்: மழையால் நின்ற கடைசி போட்டி

18 பங்குனி 2025 செவ்வாய் 04:52 | பார்வைகள் : 1738


மகளிர் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றிய நிலையில், டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி Dunedinயில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து 14.1 ஓவரில் 101 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜார்ஜியா ப்லிம்மர் 46 (37) ஓட்டங்களும், சுஸி பேட்ஸ் 31 (28) ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) தொடர் நாயகி விருது பெற்றார். அவர் இந்த தொடரில் 87 ஓட்டங்களுடன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்