போர் ஒப்பந்தத்தையும் மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்

18 பங்குனி 2025 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 1061
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர் ஒப்பந்தத்தையும் மீறி தெற்கு மற்றும் மத்திய காஸாப் பகுதியில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.ஜனவரி 19 ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தபின் இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை தற்போது நிகழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு கூறுகையில் ,
பணயக் கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் அனைத்து போர்நிறுத்த திட்டங்களையும் நிராகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஹமாஸ் படையினர் ஈடுபட்டதால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகவும் பணயக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், இதனால், கூடுதல் இராணுவப் படைகளுடன் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போராடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.