Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்!

தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்!

18 பங்குனி 2025 செவ்வாய் 08:39 | பார்வைகள் : 295


தி.மு.க., கேடு தரும் என்று அக்கட்சியின் எம்.பி. கனிமொழி, சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் பேசிய வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலை எதிர்த்து சென்னையில் நேற்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் முற்றுகை போராட்டம் அறிவித்து இருந்தனர்.

போராட்டத்திற்கு சென்ற அண்ணாமலை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அண்ணாமலை உள்ளிட்ட 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் அண்ணாமலை தமது சமூக வலைதள பதிவில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுவினால் ஏற்படும் சீரழிவு காரணமாக இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டு இருக்கிறது, ஏன் என்றால் இங்கு ஒவ்வொரு நாளும் குடிபழக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது என ஒருபுறம் தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசும் வீடியோ அன்று என்று தலைப்பிட்டு இணைக்கப்பட்டு உள்ளது.

அவரின் வீடியோ அருகிலேயே நேற்றைய தினம் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசிய வீடியோவின் ஒரு பகுதி சேர்க்கப்பட்டு உள்ளது. அதில் கனிமொழியின் பேச்சசுக்கு நேர் எதிராக அவர் பேசும் காட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளது.

அதில் பேசும் அமைச்சர் ரகுபதி, இளம் விதவைகள் அதிகரிக்கிறார்கள் என்றால் அதற்கு அரசாங்கம் என்ன செய்யமுடியும், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அரசாங்கம் எந்த பொறுப்பும் கிடையாது. அவர்கள் என்ன காரணம் என்று சொன்னால் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

டாஸ்மாக்கால் செத்துபோனார்கள் என்று கிராமங்களில் கூட சொல்லவில்லை. அதில் ஏன் நீங்கள் இளம்விதவைகள் என்று சொல்கின்றீர்கள். டாஸ்மாக்கில் குடித்து ஒரு இளைஞன் இறந்துவிட்டான் என்று எந்த கிராமத்தில் இருந்து உங்களுக்கு புகார் வந்தது என்று கூறி உள்ளார்.

இவ்விரண்டு வீடியோக்களையும் ஒன்றாக இணைத்து, ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு, தி.மு.க., கேடு தரும் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்