La Royale எங்கிற Marine nationale - தோற்றமும் வரலாறும்!!
15 சித்திரை 2017 சனி 14:30 | பார்வைகள் : 18375
இன்று உலகில் உள்ள ஒவ்வொரு நாடும், தங்கள் கடல் பிராந்தியங்களின் எல்லைகளை கடற்படை ( Navi) மூலம் பாதுகாத்துக்கொண்டு உள்ளது. எல்லைக்குள் ஊடுருவினால் குடலை உருவிவிடுவார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும்... உலகில் தோற்றுவிக்கப்பட்ட மிக பழமையான கடற்படைகளில் Marine nationale ம் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா?
1624 ஆம் ஆண்டு Marine nationale தோற்றம் பெற்றது. கிட்டத்தட்ட 400 வருடங்கள் ஆகிவிட்டன. ஆரம்பிக்கப்படும் போது இதன் பெயர் La Royale என இருந்தது. ஆரம்பித்த காலத்தில் இருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகளை மிக துல்லியமாகவும், திட்டமிட்டும் மேற்கொண்டிருந்தன.
Marine nationale கட்டுப்பாட்டில், ஏழு முக்கிய சேவைகள் இயங்குகின்றன.
the Force d'Action Navale,
the Forces Sous-marines,
the Aéronavale and
the Fusiliers Marins ( Commandos Marine உள்ளடங்கலாக),
the maritime fire-fighting battalion, the Gendarmerie Maritime மற்றும்
the support service of the fleet
தற்போது, Marine nationale இடம் 90 கப்பல்களும், 179 விமானங்களும், 36,331 பணியாளர்களும் உள்ளனர். இது 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கு!
பணியாளர்களுக்கு, கோடை காலத்தில் ஒரு சீருடை, குளிர் காலத்தில் ஒரு சீருடை, எல்லைகள் தாண்டிச்செல்வதற்கு ஒரு சீருடை, தீயணைப்பு உதவியாளர்களுக்கு ஒரு சீருடை என பல சீருடைகள் உண்டு.
பிரெஞ்சு கடற்படை எப்போதும் உலக நாடுகளுக்கு பலம் வாய்ந்த ஒரு படையாகவே உள்ளது. அதன் வரலாற்றில் பல சாகசங்கள், பிரதான கதைகள், கிளைக்கதைகள் என எண்ணிலடங்கா வரலாறு கொண்டுள்ளது. வாழ்த்துக்கள் பெருமை மிகு வீரர்களே!!