Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

AI மூலம் ஹிஜாப் அணியாத பெண்களை கண்காணிக்கும் ஈரான்!

AI மூலம் ஹிஜாப் அணியாத பெண்களை  கண்காணிக்கும் ஈரான்!

18 பங்குனி 2025 செவ்வாய் 06:10 | பார்வைகள் : 2910


ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் தற்போதைய காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் தாக்கத்தை செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஈரான் ஹிஜாப் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள்(UN) சபையின் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, எதிர்ப்பை அடக்குவதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வெகுஜன கண்காணிப்பை ஈரான்(Iran) அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தை ஈரான் பயன்படுத்தி வருகின்றது.
ஐ.நா அறிக்கையின்படி,

ஈரான் தனது கட்டாய ஹிஜாப் சட்டத்தை நடைமுறைப்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.
இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் பற்றி முறைபாடளிக்க பொலிஸ் மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் உதவுகிறது.

இந்த செயலி உதவியுடன் வாகனத்தில் ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களுடைய வாகன நம்பர் பிளேட், இடம் மற்றும் விதிமீறல் நேரம் ஆகியவை அதிகாரிகளைச் சென்றடைகின்றன.
மீண்டும் மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று வாகன உரிமையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

செப்டம்பர் 2024 முதல், ஆம்புலன்ஸ்கள், டெக்சிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள்.

இந்த செயலியைத் தவிர, ஹிஜாப் விதிகளை கண்காணிக்க ஈரானிய அரசாங்கம் தெஹ்ரான் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் வான்வழியாக ட்ரோன்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. ஹிஜாப் சட்டம் ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்கு விதிகளைச் செயல்படுத்த விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும்.

ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 இன் கீழ், இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு அறநெறிப் பொலிஸாரின் காவலில் 22 வயதான மஹ்சா அமினி இறந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின.
 
அதைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக ஐநா சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்