Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் மிகப்பெரிய விமான தாங்கி கப்பல்!!

பிரான்சின் மிகப்பெரிய விமான தாங்கி கப்பல்!!

14 சித்திரை 2017 வெள்ளி 10:30 | பார்வைகள் : 20528


ஒவ்வொரு நாட்டின் போர் விமானங்கள், போர் கப்பல்கள் எல்லாம் மிக பிரம்மாண்டமானவை.. பிரம்மிப்பானவை! பிரான்ஸ் அதற்கு சலித்ததா என்ன? இன்று நீங்கள் அட்டகாசமான ஒரு விமான தாங்கி கப்பல் குறித்து தெரிந்துகொள்ளப்போகிறீர்கள்!! அதன் பெயர் Charles de Gaulle!!
 
இராணுவ தளபதி, மாவீரன், ஜனாதிபதி சாள்-து- கோள் நினைவாக இந்த பெயர் கப்பலுக்கு வைக்கப்பட்டுள்ளது. 
 
DCNS நிறுவனத்துக்கு, பெப்ரவரி 3 ஆம் திகதி 1986 ஆம் ஆண்டு இந்த கப்பலுக்கான கட்டுமான பணி வழங்கப்பட்டது. மூன்று வருடங்களின் பின்னர், ஏப்ரல் 14 (இன்றைய திகதியில்) 1989 ஆம் ஆண்டு கப்பல் கட்டிமுடிக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. அதன் பின்னர் மே மாதம் 7 ஆம் திகதி 1994 ஆம் ஆண்டு சேவைக்கு வந்தது. 
 
கப்பல் பணிக்கான வேலைகள் ஆரம்பிக்கும் போது,  Richelieu எனும் பெயரில் ஆரம்பித்தார்கள். ஆனால் அது வெள்ளோட்டத்துக்கு வரும் முன்னரே, (மே 18, 1987) கப்பலுக்கு Charles de Gaulle என பெயர் சூட்டப்பட்டது. Marine Nationale இந்த கப்பலை இயக்குகிறது. 
 
எந்த வடிவத்தத்தை போன்றதும் இல்லாமல், பிரத்யேக வடிவமைப்பில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும், பின்னரும் இதுபோன்ற வடிவத்தில் விமான தாங்கி கப்பல் கட்டப்படவில்லை. மொத்தம் 42,500 தொன் எடை கொண்டது இந்த கப்பல்!! (நிரப்பப்பட்ட கப்பல்)
 
கப்பலின் மொத்த நீளம் 261.5  மீட்டர்கள். கப்பலின் Beam மாத்திரம் 64.36 மீட்டர்கள். கப்பலின் அதிகூடிய வேகம் 50 கிலோ மீட்டர்கள் / மணிநேரத்துக்கு. 500 தொன் எடைகொண்ட இராணுவ வெடி பொருட்கள் வைக்கும் இடவசதியும், 800 கமாண்டோ வீரர்கள் தங்குமளவு வசதியும் கொண்டது இந்த கப்பல். தவிர, 45 நாட்களுக்குரிய உணவுகளையும் சேமிக்கலாம். 
 
பிற கப்பல்கள், ரேடார் கருவிகள். விமானங்கள் போன்றவற்றை நான்கு திசைகளிலும் கவனிக்கும் சிறப்பு வசதிகள் கொண்ட கப்பல் இது. ஐரோப்பாவின் மிகப்பெரிய கப்பலும், அமெரிக்காவுக்கு வெளியே கட்டப்பட்ட முதல் அணுகுண்டு தாங்கி கப்பலும் இதுவாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்