Paristamil Navigation Paristamil advert login

‘கூலி’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

 ‘கூலி’  படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

18 பங்குனி 2025 செவ்வாய் 09:08 | பார்வைகள் : 367


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கூலி'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் அறிவிப்பு 2023ம் வருடம் வெளிவந்து, படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஒரு வீடியோவுடன் வெளியானது. கடந்த வருடம் ஜுலையில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தொடர்ந்து பல்வேறு கட்டங்களாகப் படப்பிடிப்பு நடந்து வந்தது.

ஐதராபாத், விசாகப்பட்டிணம், ஜெய்ப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்தது. சுமார் 9 மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார்கள். இப்படத்தில் ஹிந்தி நடிகர் ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்கள்.

2025ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்