இளம் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை... காவல்துறையினர் குவிப்பு!!

18 பங்குனி 2025 செவ்வாய் 09:43 | பார்வைகள் : 5810
Gaîté Lyrique முற்றத்தில் இளம் அகதிகள் கடந்த மூன்று மாதகாலமாக ஆக்கிரமித்துள்ளனர். பல்வேறு முறை முயற்சி செய்தும் அவர்களை வெளியேற்ற முடியவில்லை. இறுதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அவர்களை வெளியேற்றும் படி நீதிமன்றம் பணிக்க, மார்ச் 18, இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு அகதிகள் வெளியேற்றப்பட்டனர். Boulevard Sébastopol மற்றும் Rue Saint-Martin ஆகிய வீதிகள் முடப்பட்டு இந்த பணி இடம்பெற்றது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025